Tips





சங்கீதம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா ?





இவ்வுலகில் இசையை விரும்பாதவர்கள் எவரேனும் உண்டா? இல்லை.! எப்படியாவது இசையால் தன்னை மெய்மறக்கும் அளவிற்கு விரும்புபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இசை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை என்ற அளவிற்கு இசையோடு ஒன்றோடொன்று பற்றிப் போயிருக்கும் இசைக் காதலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிகபடியாக சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரியப்படுபவர்களுக்கான சில ஆலோசனைகள் தருகிறேன.


சங்கீதமானது வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அற்புதமான ஒரு கலை. அக்கலையை  அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்வது தான் சிறந்தது. அடிப்படையில் இருப்பது ஸ்வரவரிசைகள் ! முதலாம் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என மூன்றுவகையான காலங்களிலும் பாட வேண்டும். அதன் பின் கீதம், கீர்த்தனை , தில்லானா , பதம் போன்றவற்றினை ஸ்வர ஸாகித்தியத்தோடு பாட வேண்டும். அத்தோடு ஆரம்பத்திலிருந்து கற்க வேண்டுமெனின்  சுருதிப்பெட்டியை இசைக்காக பயன்படுத்தலாம்


                                                                    தொடரும்………

   1.   சினிமா பாடல்களை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அதாவது இதையே வேலையாகக் கொண்டிராமல் , உங்களது இடைவேளை நேரங்களில் கேட்கலாம். அப்பாடலோடு சேர்ந்து நீங்களும் பாட முயற்சி செய்யுங்கள். வார்த்தைகளை உன்னிப்பாக செவிமெடுங்கள். உச்சரிப்பை அவதானியுங்கள். பாடலின் இடையில் வரும் இசையை நன்கு கேளுங்கள். பாடலின்  வரிகள் பாடப்படும் முறையையும் அதன் அசைவுகளையும் நன்கு அவதானித்துப் பாடுங்கள்.

2.   பாடலில் கீழ்ஸ்தாயியில் இருந்து பாடல் இசை வருமாயின் , அடித்தொண்டையிலிருந்து      வார்த்தைகளை எடுங்கள். நடுஸ்தாயியில் பாடல் இருந்தால் வழமையாகப் பாடுவதைப் போல் பாடுங்கள். உச்சஸ்தாயியில் பாடல் இருந்தால் குரல் மென்மையாக இருக்கும். விடாமல் பாடலொன்றைப் பாட மூச்சுப்பயிற்சி செய்யுங்கள். அது பிராணாயாமம் எனப்படும். இதன் மூலம் மூச்சுவிடாமல் பாடலைப் பாட முடியும்.

3.   அத்தோடு குரலை மென்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.குளிர்ந்த பானங்கள், ஐஸ்கிறீம்கள் சாப்பிடுவதை நிறுத்துங்கள். இவைகளுக்கு பதிலாக நன்கு தேன் சாப்பிடுங்கள். அது உங்கள் குரலை மென்மையாக்க உதவும்.

4.   நீரினுள் இறங்கி தலையை மட்டும் வெளியில் வைத்துக்கொண்டு தொண்டைப்பகுதியிலிருந்து கால் வரை நீரினுள் அமிழ்த்துங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தொண்டை வலி வராது. குரல் மேன்மையாகும்.






No comments:

Post a Comment