Parts of Music

சங்கீதம்  என்றால் என்ன ?




சங்கீதம் என்பது செவிக்கு இன்பத்தைத் தரும் த்வணிகளைப் பற்றிய கலையாகும். அது சிறந்த கலைகளில் ஒன்று. சிறந்த கலைகளாகிய லலித கலையில் சங்கீதம் மிக்க மேன்மையைத் தரும். மனிதர்கள், பண்டிதர்கள், பாமரர்கள், பாலர்கள், விருத்தர்கள் ஆகிய எல்லோருக்கும் இன்பத்தைத் தரக்கூடியது சங்கீதம் ஆகும்.

சங்கீதமானது கீதம், நாட்டியம். நிருத்தியம் என்ற மூன்றும் சேர்ந்ததாகும்.

     கீதம்- வாய்ப்பாட்டு சங்கீதம்.

 வாத்தியம்- வாத்தியங்களால் வாசிக்கக்கூடிய சங்கீதம்.
நிருத்தியம்- நாட்டியம் அல்லது நடனம் சார்ந்த இசை என்பவற்றைக் குறிக்கும்.

சங்கீதத்தை நிகரற்ற கலை எனலாம். சங்கீதத்தை கேட்டு உண்மையாக அனுபவிப்பவர் களுக்கு ரசிகர் என்று பெயர். இது காந்தர்வ வேதம் எனவும் அழைக்கப்படும். இது நான்கு உப வேதங்களில் ஒன்று. கடவுள் வழிபாடு செய்யவும் கடவுளை அறிவதற்கும் சங்கீதம் ஒரு முக்கிய சாதனமாகும். இதன் காரணமாகவே சங்கீதத்தை  ஒரு வித்தை எனப் பெரியார்கள் கூறுவர்.

சங்கீதம் பயிலுவதினால் அன்பு, அடக்கம், பக்தி, நட்பு, மனதிருப்தி. மற்றும் சாந்தி முதலிய நற்குணங்கள் விருத்தியடைகின்றன. மேலும் அறிவு, புத்திகூர்மை, கற்பனைசக்தி, ஞாபகசக்தி, நல்லொழுக்கம், முதலியவைகளும் சங்கீதம் பயிலுவதினால் விருத்தியடை கின்றன. பல தேசத்து மக்களை ஒழுங்கு சேர்க்கக்கூடிய சக்தி சங்கீதத்திற்கே உள்ளது. உலக ஐக்கிய பாவத்தை உண்டாக்கும் சக்தியும் சங்கீதத்திற்கே உள்ளது. சங்கீதம் பயிலு வதினால் ஒருவருக்கு அழகான முகவெட்டும் கவர்ச்சிகரமான தோற்றமும் தேஜஸும் உண்டாகின்றது.

சங்கீதமானது ‘’மெலோடிக்கல் சங்கீதம்’’ என்றும் ‘’ஆர்மோனிக்கல் சங்கீதம்’’ என்றும் இரண்டு வகைப்படும்.
      01..   மெலோடிக்கல் சங்கீதம்  :ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் ஒன்றன் பின் ஒன்றாக வரும் . 
    {  கர்நாடக இசை }
      02.  ஆர்மோனிக்கல் சங்கீதம்   : ஸ்வரத்தொகுதிகள் அல்லது ஸ்வர அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் . 
    {ஐரோப்பிய .இசை}  

தேனையும் பாலையும்  விரும்புவதையும் போல் எல்லோரும் சங்கீதத்தையும் விரும்புவார்கள். கானம் செய்யும் பொழுதும் கானத்தை கேட்கும் பொழுதும் நாம் இவ்வுலக கவலைகளை மறந்து இன்பமடைகிறோம் . உயர்ந்த சங்கீதத்தை கேட்டால் ,நாம் மெய் மறந்து இன்பக்கடலில் மூழ்குவதும் தெய்வீக உலகத்தில் உலாவுகின்றோம் என்னும் உணர்ச்சியைப் பெறுகின்றோம். இத்தகைய அரிய அநுபவம் சங்கீதத்திற்கே உரியதாகும் . மனிதனுடைய துக்கங்களை நீக்கி சற்குணங்கள் பெருக்கி அவனை ஜன சமூகத்திற்கு ஒழுங்கானவையாக ஆகக்கூடிய சக்தி சங்கீதத்திற்கே உள்ளது.

                                                                           இன்னும் வரும் ....



No comments:

Post a Comment